/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் நல சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
/
மக்கள் நல சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தினர், ஈரோட்டில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சிப்காட் - நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ்., மீட்டர் பொருத்தும் இடத்தை மறுபரிசீலனை செய்து, குட்டப்பாளையம் அருகில் அனைத்து பகுதி கழிவு நீரும் கலக்கும் இடத்திற்கு தென்புறம் பொருத்த வேண்டும்.
சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.