/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரமனார் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
பெரமனார் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பெரமனார் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பெரமனார் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : செப் 09, 2024 06:36 AM
பவானி: பவானி அருகே, கேசரிமங்கலம் அடுத்த கூத்தம்பட்டியில், காவிரியாற்றின் வலது கரையில், 482 ஆண்டுகள் பழமையான பெரமனார் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்து, இரண்டாண்டுகளாக பணி நடந்து வந்தது.
பணி நிறைவு பெற்ற நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்களால் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கேசரிமங்கலம் கிராமத்துக்குட்பட்ட, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.