/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மனுத்தாக்கலுக்கு அனுமதி
/
வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மனுத்தாக்கலுக்கு அனுமதி
வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மனுத்தாக்கலுக்கு அனுமதி
வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மனுத்தாக்கலுக்கு அனுமதி
ADDED : ஜன 09, 2025 07:51 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாளை வேட்பு மனுத்தாக்கல் துவங்கும் நிலையில், வேட்பாளருடன் சேர்ந்து, 5 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்யும் அறையில் அனுமதிக்கப்ப-டுவர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மாநகராட்சி தலைமை அலுவ-லக ஆணையர் அலுவலகத்தில் நாளை முதல் வரும், 17 வரை வேட்பு மனுத்தாக்கல் நடக்கிறது. அரசு விடுமுறை நீங்கலாக, 10, 13, 17 ஆகிய நாட்களில் மட்டும் காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்.
இதுபற்றி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மணீஷ் கூறியதாவது:வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகளை தயார்படுத்தி வரு-கிறோம். பொது வேட்பாளர்கள், 10,000 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 5,000 ரூபாய் செலுத்தி மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் உட்பட, 5 பேர் மட்டும் வேட்பு மனுத்-தாக்கல் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர் வரும்போது, மூன்று கார்களில், 200 மீட்டருக்கு அப்பாலும், ஒரு காரில், 100 மீட்டர் வரையும் அனுமதிக்கப்படுவர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர், அவர் சார்ந்த கட்-சியின் லெட்டர் பேடில் வேட்பாளர் பரிந்துரையும், அத்தொகு-தியை சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிதலும் வழங்க வேண்டும். சுயேட்சை உள்ளிட்ட பிற வேட்பாளர்கள், இதே தொகுதியை சேர்ந்த, 10 வாக்காளர் முன்மொழிதலை வழங்க வேண்டும்.
வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக, அவர்களது வேட்பு மனுவை சரி பார்த்து வழங்க, தனியாக அலுவலர்களை நியமித்-துள்ளோம். அவர்கள் மனுவை சரி பார்த்து, உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதையும், பூர்த்தி செய்யப்பட்டதையும் உறுதி செய்து, மனுத்தாக்கலுக்கு உள்ளே அனுமதிப்பர். இதனால், விரைவாக வேட்பு மனுத்தாக்கல் நடக்கும். வேட்பு மனுக்கள் இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்கும் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.