/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருச்சாளி, தெருநாய் அட்டகாசத்தால் சப்-கலெக்டர் ஆபீசில் கொடி கம்பத்துக்கு ஆபத்து

ADDED : நவ 23, 2024 01:34 AM
பெருச்சாளி, தெருநாய் அட்டகாசத்தால்
சப்-கலெக்டர் ஆபீசில் கொடி கம்பத்துக்கு ஆபத்து
கோபி, நவ. 23-
பெருச்சாளி மற்றும் தெருநாய்கள் தோண்டிய குழியால், கோபி சப் - கலெக்டர் ஆபீசில் உள்ள தேசிய கொடிகம்பத்துக்கு ஆபத்து காத்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபியில், சத்தி சாலையில், கோபி சப்-கலெக்டர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு பிரதான கட்டடத்தின் எதிரே, தேசிய கொடி கம்பத்தின் கட்டமைப்பை சுற்றி, அழகுச்செடி வளர்க்கப்படுகிறது. கொடிகம்பத்தை தாங்கி நிற்கும் மேடை மட்டுமே கான்கிரீட் கட்டமைப்பு போடப்பட்டுள்ளது. அதை சுற்றி மண் தரையாக உள்ளது.
கம்பத்தை சுற்றியுள்ள மண் தரையை, பெருச்சாளி மற்றும் தெருநாய்கள், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமாக குழி தோண்டியுள்ளன.
இதனால் கொடி கம்பத்தின் கட்டமைப்பு வலுவிழந்து வருகிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், கொடி கம்பத்தை சுற்றியுள்ள மண் தரை பகுதியை பலப்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.