/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பெரும்பள்ளம் அணை
/
7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பெரும்பள்ளம் அணை
ADDED : அக் 22, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் மலை அடிவாரத்தில் பெரும்பள்ளம் அணை அமைந்துள்ளது. அணை நீர்மட்டம், 30.84 அடி. நீர்பிடிப்பு பகுதிகளான கடம்பூர் மலை, மல்லியம்மன் துர்கம் மேற்கு மலை, வாழைபள்ளம், கருமலை கரடு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்பட்ட, 185 கன அடி நீர் பவானி ஆற்றில் கலக்கிறது. கடந்த, 2018ல் அணை நிரம்பியது. அதன் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.