/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி 35வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி
/
பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி 35வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி
பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி 35வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி
பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி 35வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2025 01:41 AM
பெருந்துறை,பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் ௨ தேர்வில், 35வது ஆண்டாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவர் சந்தோஷ், 591 எடுத்து முதலிடம், சங்கேஷ், 590 எடுத்து இரண்டாமிடம், 589 எடுத்து நிகில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில், 35வது ஆண்டாக பிளஸ் ௨ தேர்வெழுதிய, 168 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 575 மதிப்பெண்களுக்கு மேல், 6 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 26 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 77 பேரும் பெற்றுள்ளனர்.
வேதியியலில் ஒருவரும், கணிதத்தில் மூன்று பேரும், உயிரியலில் ஒருவரும், கணினி அறிவியலில் ஏழு பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் ஐந்து பேரும், கணக்குப் பதிவியலில் இரண்டு பேரும், வணிகவியலில் ஒருவரும், இயற்பியலில் இரண்டு பேரும், பொருளியலில் ஒருவரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்
பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், கற்பித்த ஆசிரியர்களை, பள்ளி தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், துணைத் தலைவர் குமாரசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.