/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை கொங்குப்பள்ளி தடகள போட்டியில் அபாரம்
/
பெருந்துறை கொங்குப்பள்ளி தடகள போட்டியில் அபாரம்
ADDED : ஆக 22, 2025 01:11 AM
பெருந்துறை, பெருந்துறை ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளியில் தடகளப்போட்டி நடந்தது. இரு பிரிவுகளாக (யு-10 மற்றும் யு-15) நடந்தது. இதில் பெருந்துறை கொங்குப்பள்ளி மாணவன் திருமூலர், முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ௫,௦௦௦ ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றார்.
இதேபோல் பள்ளி கல்வித்துறை நடத்திய பெருந்துறை குறுமைய தடகள போட்டியில், கொங்கு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், 14 வயது மாணவர் பிரிவில், சுஜய்குமார் குண்டு எறிதல், வட்டெறிதல் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று, தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும், 11 மாணவியர், ஏழு மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் சரவணன், சுரேஷ் ஆகியோரை, பள்ளி தலைவர் யசோதரன், துணைத்தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகக் குழுவினர் மற்றும் முதல்வர் முத்துசுப்பிரமணியம் பாராட்டினர்.