ADDED : ஜன 01, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஜன. 1-
கடம்பூர் போலீசார் மாக்கம்பாளையம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த இருவரிடம், 6.670 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது.
விசாரணையில் பெருந்துறை, ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சரண்ராஜ், 32, சுரேஷ், 40, என்பது தெரிந்தது. கர்நாடக மாநிலத்திலிருந்து விற்பனைக்காக வாங்கி செல்வது தெரிந்தது. பைக்குடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

