/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சில்லரை மது விற்பனை கடையைஎதிர்த்து மனு
/
சில்லரை மது விற்பனை கடையைஎதிர்த்து மனு
ADDED : ஏப் 22, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டை அடுத்த முத்தம்பாளையத்தை சேர்ந்த மக்கள், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த மனு: முத்தம்பாளையத்தில் ஏற்கனவே செயல்பட்ட டாஸ்மாக் கடை, உயர்நீதிமன்ற உத்தரவால் சில மாதங்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது அந்த இடத்தின் அருகே மதுபான மற்றும் தனியார் குளிர் மதுபான கடை என பதிவு செய்யப்பட்டு, விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. குடியிருப்பு, கோவில், குளம், வாய்க்கால் அமைந்துள்ள இடத்தில் இந்த கடையை அனுமதிக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.