/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு
/
குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு
ADDED : டிச 05, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே குமரன் நகர் மக்கள், மொடச்சூர் பஞ்சாயத்து ஆபீசில் நேற்று மனு அளித்தனர். அதில்
கூறியிருப்பதாவது: குமரன் நகரில் கடந்த, 12 ஆண்டுகளாக, 50 குடும்பங்கள் வசிக்-கிறோம். எங்கள் பகுதியில்,
மின் விளக்கு, சாலை, சாக்கடை உள்-ளிட்ட வசதிகளின்றி அவதிப்படுகிறோம். குண்டும், குழியமாக உள்ள
சாலையில், மழைக்காலங்களில் நடமாட முடியவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்
அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அடிப்படை தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும். இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.