/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்
/
மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்
ADDED : ஜூலை 19, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி :சித்தோடு அருகே எலவமலை பஞ்., செங்கலப்பாறை பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் பட்டா வேண்டி, பவானி தலைமை தபால் நிலையத்துக்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அங்கு, 500 தபால் கார்டு வாங்கினர். அதில் 'எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்' என எழுதி, ஈரோடு கலெக்டர், ஈரோடு தாசில்தாருக்கு அனுப்பினர்.