ADDED : நவ 19, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடிப்படை வசதி கேட்டு மனு
ஈரோடு, நவ. 19-
சித்தோடு, குமிளம்பரப்பு சாலை, வி.கே.எல்., நகரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி நான்காவது வார்டில் வி.கே.எல்., நகர் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இப்பகுதி மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.