ADDED : ஜூலை 22, 2025 01:31 AM
ஈரோடு, தமிழ் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் பொன்னுசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:
பவானி தாலுகா படவல் கால்வாய் பஞ்., பொதியம்துண்டு, அருந்ததியர் தெரு, கல்பாவி பஞ்., பெரிய குரும்பப்பாளையம் பகுதியில், அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஒருவருக்கு வழங்கிய பட்டாவில், 3, 4 குடும்பமாக பெருகி வசித்து வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிச்சி மலை கரடில், 650 ஏக்கருக்கு மேல் அரசு நிலம் உள்ளதாலும், கரட்டுக்கு கீழ் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாலும், அவ்விடத்தில் பட்டா வழங்கலாம். இதேபோல் பெருந்துறை தாலுகா வெள்ளோடு, லட்சுமிபுரம், வாவிக்கடவு, திண்டல், காரப்பாறை, பவானி தேவனாம்பாளையம், சென்னிமலை குளத்துப்பாளையம், கே.ஜி.வலசு அக்ரஹாரம் பகுதியினரும் பட்டா வழங்க வலியுறுத்தி மனு வழங்கினர்.