ஈரோடு, நவ. 9-
மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டி, ஞானபுரம் கிளை தமிழ்நாடு விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
வடுகப்பட்டி கிராமத்தில் நிலைகுடியேற்ற சங்கத்தில் உள்ள, 131 நபர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிலத்தில், ஒரு பகுதியில் மட்டும், கீழ்பவானி வாய்க்கால் பாசன வசதி செய்து தரப்பட்டது. மற்ற நிலங்களுக்கும் பாசன வசதி கேட்டு போராடி வருகிறோம்.
தற்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர், அந்நிலங்களை ஆய்வு செய்து பாசன வசதி செய்து தர, வாய்க்காலை விரிவுபடுத்தி, மதகு கட்டுவதற்கு, வருவாய் துறை அனுமதி கேட்கிறார். இந்த யோசனை எங்களது கோரிக்கையை நீர்த்துப்போக செய்கிறது. புதிது, புதிதாக நிபந்தனை, யோசனைகளை தெரிவிக்காமல், இப்பகுதிக்கு பாசன வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.