தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவிலை அகற்ற வலியுறுத்தி மனு

கோவிலை அகற்ற வலியுறுத்தி மனு

கோவிலை அகற்ற வலியுறுத்தி மனு


ADDED : செப் 08, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; கஸ்பாபேட்டையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முனியப்பன் சுவாமி கோவிலை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்-தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஈரோட்டை சேர்ந்த ரத்தினசாமி, அளித்துள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது: மொடக்குறிச்சி அடுத்த கஸ்பா-பேட்டை நான்கு ரோடு சந்திப்பு அருகில், சாலையை ஆக்கிரமித்து சிலர் முனியப்பன் சுவாமி கோவிலை கட்டியுள்ளனர். கோவிலை அகற்ற, 2023ல் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கிலும், கோவிலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பொதுப்பணித்-துறை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில்

தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us