ADDED : செப் 08, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆனந்தகுமார் சாகு, 38, ஐசக் திகால், 32, ஆகியோரை, 22 கிலோ கஞ்-சாவுடன், ஈரோடு டவுன் போலீசார் கைது செய்-தனர்.
இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்துக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பலில் முக்கிய நபர்களாக இருப்பதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி ஏற்றதால், இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரி-டமும், இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
