ADDED : செப் 08, 2026 05:47 AM
ஈரோடு; ஈரோடு தெற்கு எல்.ஐ.சி., அலுவலகம் அருகே மதுரை வீரன் கோவில் உள்ளது. புதுகள்ளி வலசை சேர்ந்த குப்பன், 75. பூசாரியாக உள்ளார். கோவில் ரயில்வே இடத்தில், 60 ஆண்டுக்கும் மேலாக செயல்படுகிறது.
கடந்த, 1ல் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது மூன்று ஐம்பொன் கோபுர கலசம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்ப-டையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.கஞ்சா விற்ற 4 பேர் கைது
ஈரோடு, செப். 8
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே, ஈரோடு டவுன் போலீசார் ரோந்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாரதியார் வீதி சந்-தோஷ்குமார், 19; ஈரோடு கொல்லம்பாளையம் எல்.ஜி.ஜி.எஸ்., காலனி அக்பர் அலி, 19; திருப்பூர் டி.சி மார்க்கெட் காயிதே மில்லத் நகர் சாகித், 20; சேலம் மாவட்டம் கொட்டாம்பட்டி சேட்டு (எ) ஸ்டாலின், 25; ஆகியோர் நின்றிருந்தனர். அவர்க-ளிடம் சோதனை செய்ததில், 550 கிராம் கஞ்சா இருந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்-தனர்.
