ADDED : ஜூலை 03, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராம மக்கள், மயான வசதி கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மனு
விபரம்: சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு பஞ்சாயத்தில்
சூளைப்புதுார், வேப்பங்காடு, தண்ணீர்பந்தல் கிராமங்களில், 150க்கும்
மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர். பல ஆண்டாக பாறை பகுதியில்
உள்ள காலியிடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். இந்த இடத்தில் ஜவுளி
பூங்கா அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஜவுளி பூங்கா
அமைந்தால், மயானம் இல்லாத நிலை ஏற்படும். எனவே ஜவுளி பூங்கா கொண்டு
வரும் முன், மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து வழங்க வருவாய் துறை
முன்வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.