/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் சாலை வசதி வி.சி.,க்கள் சார்பில் மனு
/
மாநகராட்சியில் சாலை வசதி வி.சி.,க்கள் சார்பில் மனு
மாநகராட்சியில் சாலை வசதி வி.சி.,க்கள் சார்பில் மனு
மாநகராட்சியில் சாலை வசதி வி.சி.,க்கள் சார்பில் மனு
ADDED : மே 27, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, திருப்பூர் மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி, ஈரோடு கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகர் தலைமை தபால் நிலையம் பின்புறம், மருத்துவமனைகள் உள்ளன.
இப்பகுதி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், மழை காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் மக்கள், நோயாளிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. டூவீலரில் செல்வோர் வழுக்கி விழும் நிலை உள்ளது. சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விரைந்து சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.