/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண மோசடி பவுண்டேஷன் நடவடிக்கை கோரி மனு
/
பண மோசடி பவுண்டேஷன் நடவடிக்கை கோரி மனு
ADDED : மார் 11, 2025 06:48 AM
ஈரோடு: திருச்செங்கோடு சித்தேஸ்வரி, சென்னிமலை சந்திரா, தனலட்சுமி உட்பட, 30க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
முன்னாள் ஜனாதிபதி பெயருடன் ஈரோட்டில் ஒரு பவுண்டேஷன் நிறுவனம் நடத்தினர். அவர்கள் எங்களுக்கு வட்டியின்றி, மானியத்தில் கடன் வழங்குவதாக எங்களிடம் பணம் பெற்றனர். ஈரோடு, திருச்செங்கோடு, சென்னிமலை, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கணக்கானோர் பணம் செலுத்தியுள்ளோம். கடனும் தராமல், நாங்கள் செலுத்திய பணத்தையும் தராமல் சில கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்கான ஆவணங்கள், ரசீது உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.