/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5.50 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி மனு
/
ரூ.5.50 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி மனு
ADDED : ஜன 04, 2026 05:31 AM
ஈரோடு: சேலம் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 39; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பழைய இரும்பு கடை நடத்தி வருகிறேன். எனது சகோதரர் தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றிருந்தார். தவணை கட்டாததால் வங்கியில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள இருந்தனர்.
நிதி நிறுவனம் நடத்தி வந்த அந்தியூர் கார்த்தி என்பவர், வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக சொத்து அசல் ஆவணம், கையெழுத்து போட்ட வெற்று காசோலை பெற்றுக்கொண்டார். தான் கூறியபடி, 19.27 லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தந்தார். ஆனால் மறுநாளே வங்கி கடனுக்காக நான் கொடுத்த காசோலையை பயன்படுத்தி, 5.50 லட்சம் ரூபாயை கார்த்தி எடுத்து கொண்டார். அவரிடம் கேட்டபோது முதலில் தருவதாக கூறியவர், தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

