/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுமை தொழிலாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
/
சுமை தொழிலாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2026 05:31 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் தலைவர் அர்த்தநாரி தலைமையில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் செந்தில்குமார் உட்பட பலர் பேசினர்.நுால், பீஸ் கட்டுகள் ஏற்றி, இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வை வழங்க, வியாபாரிகள் சங்கத்தை வலியுறுத்துவது. இதுகுறித்து வருவாய் துறை, தொழிலாளர் துறையினர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும். கடந்த காலங்களில் வருவாய் துறை, தொழிலாளர் துறை மூலம் கூலி உயர்வு ஒப்பந்தங்கள், உத்தரவுகளை வியாபாரிகள், நிறுவனங்கள் அமலாக்காமல் உள்ளது பற்றி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

