ADDED : ஜூன் 23, 2026 01:25 AM
ஈரோடு; ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் தலைவர் துரைராஜ் தலை-மையில், ஈரோடு டி.ஆர்.ஓ.,விடம், மனு வழங்கி கூறியதாவது:
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் பஸ் பாஸில், 'இலவசம்' என்ற வார்த்தை இல்லை. இதனால் நடத்துனர்களுடன் பிரச்னை எழுகிறது. நடத்துனர்களுக்கு உரிய சுற்-றறிக்கை அனுப்ப வேண்டும். பஸ்களில் மாற்-றுத்திறனாளிகளுக்கு இருக்கை இருந்தும், ஒதுக்-குவதில்லை. தொலைதுார பஸ்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய முடியாமல், முன்-பதிவு காரணம் காட்டி தவிர்க்கின்றனர். மாற்றுத்-திறனாளிகள் இருக்கையில் வேறு நபர்களை அமர வைக்கின்றனர். அனைத்து வகை மாற்றுத்-திறனாளிகளுக்கும் மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம் மாதம் தோறும் நடத்த வேண்டும். ஈரோடு ஜி.எச்., கோபி ஜி.எச்., ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடக்கும் முகாம்களில், போதிய இட வசதி ஏற்ப-டுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினர்.
