ADDED : மே 13, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலர் வீரகோபால் சார்பில் வழங்கிய மனுவில் கூறியதாவது: சிவகிரி டவுன் பஞ்., வார்டு, 16க்கு உட்பட்ட பொரசமேட்டுபுதுார், அண்ணா நகரில் அருந்ததியர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த, 2004ல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 130 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.
இதுவரை இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை டவுன் பஞ்., நிர்வாகம் செய்து தரவில்லை. மேலும் மெத்தனம் காட்டாமல், அடிப்படை வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.