தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அறக்கட்டளை மாஜி அறங்காவலரிடம் ஆவணங்களை பெற்று தரக்கோரி மனு

அறக்கட்டளை மாஜி அறங்காவலரிடம் ஆவணங்களை பெற்று தரக்கோரி மனு

அறக்கட்டளை மாஜி அறங்காவலரிடம் ஆவணங்களை பெற்று தரக்கோரி மனு


ADDED : செப் 06, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பாசம் பவுண்டேஷன் அறக்கட்டளை பிரதிநிதி, அறங்காவலர் விபுல் சந்தாலியா, ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதியிடம் அளித்த மனு:

ஈரோடு மோசிகீரனார் வீதியை சேர்ந்த யாசர் அராபத், 42; பாசம் பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலராக இருந்தார். அறக்கட்டளை விதிகளுக்கு மாறாக செயல்பட்டது, நிர்வாக சீர்கேடு, முறையான கணக்குகளை பராமரிக்க தவறியது மற்றும் சுயலாபத்திற்காக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமைப்பிலிருந்து முறைப்படி நீக்கப்பட்டார்.

அப்போது அமைப்பிற்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள், அதிகாரப்பூர்வ ரசீது புத்தகங்கள், தோராயமாக, 8,000 ரூபாய் ரொக்கம், குடும்ப அவசர தேவைக்காக பெற்ற, 60 ஆயிரம் கடன் தொகை அவரிடம் இருந்தது. பதவி நீக்கத்துக்கு பின் இந்த சொத்து, பணத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு பலமுறை எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியும் தர மறுத்து வருகிறார்.

ரசீது புத்தகங்கள், ஆவணங்களை பயன்படுத்தி மக்களிடம் தவறாக பணம் வசூலிக்கவோ, அமைப்பின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ வாய்ப்புள்ளது.

எனவே யாசர் அராபத்திடம் இருக்கும் அசல் ஆவணங்கள், ரசீது புத்தகங்கள் மற்றும் பணத்தை மீட்டுத் தருவதோடு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us