ADDED : செப் 06, 2026 05:42 AM

அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
யூனியன் பூதப்பாடி பஞ்., ஆறாவது வார்டு பகுதியில், 250க்கும் மேற்பட்ட
குடும்பத்தில், 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒரு மாதமாக
இவர்களுக்கு சரியாக குடிநீர் வழங்கவில்லை.
இதனால் பூதப்பாடி
பஸ் ஸ்டாப்பில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில்
ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், வருவாய் துறையினர்
பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளிக்கவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால்
அந்தியூர் - அம்மாபேட்டை சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
