/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுகளஞ்சி மக்கள் குடிநீர் வசதி கோரி மனு
/
சிறுகளஞ்சி மக்கள் குடிநீர் வசதி கோரி மனு
ADDED : நவ 19, 2024 01:23 AM
சிறுகளஞ்சி மக்கள் குடிநீர் வசதி கோரி மனு
ஈரோடு, நவ. 19-
சென்னிமலை யூனியன் சிறுகளஞ்சி பஞ்., ஸ்ரீசக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஸ்ரீசக்தி நகரில், 60 குடும்பத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இரு ஆண்டுக்கு மேலாக வசிக்கும் எங்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட பயன் கிடைக்கவில்லை.
அமைப்பு சார்பில் ஆழ்துளை கிணறு போட்டு கொடுத்ததால், இதுவரை அந்த நீரை பயன்படுத்தினோம். சமீபமாக நிலத்தடி நீர் வற்றியதால், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த, 10 நாட்களாக லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஏழை தொழிலாளர்கள் என்பதால் தொடர்ந்து குடிநீரை விலைக்கு வாங்குவது இயலாத காரியம். எங்களு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

