/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலனி பகுதிக்கு குடிநீர் பைப்லைன் கோரி மனு
/
காலனி பகுதிக்கு குடிநீர் பைப்லைன் கோரி மனு
ADDED : டிச 24, 2024 02:00 AM
ஈரோடு, டிச. 24-
அந்தியூர் தாலுகா, கன்னப்பள்ளி அருகே பனங்காட்டூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: எங்களது காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கிறோம். 30 ஆண்டு களுக்கு மேலாக அதே இடத்தில் வசிப்பதுடன் கூலி வேலை செய்து வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதி
உட்பட கிராமப்புறங்களில் தெருக்களுக்கும்,
வீடுகளுக்கும் குடிநீர் பைப்லைன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களாக வசிக்கும் எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால், வெகுதுாரம் சென்றும், குறைந்த அளவே தண்ணீர் எடுத்து வருவதாலும் சிரமப்படுகிறோம். இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.