/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
/
விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
ADDED : ஆக 26, 2025 01:52 AM
தாராபுரம், விநாயகர் சிலை அமைக்க அனுமதி கேட்டு, தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மனு தரப்பட்டது.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தாராபுரம் காந்திபுரத்தில் விநாயகர் சிலை அமைக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் அப்பகுதியை, சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த, 31 ஆண்டுகளாக காந்திபுரத்தில் விநாயகர் சிலை அமைத்து சதுர்த்தி விழா நடத்தி வருகிறோம். நடப்பாண்டும் விநாயகர் சிலை அமைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., கூறினார். மக்களுடன் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டல அமைப்பாளர் சின்ன குமரவேல், மாவட்ட தலைவர் வேலுச்சாமி மற்றும் நகர அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் சென்றனர்.