ADDED : அக் 23, 2026 06:36 AM

ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து சமுதாய மக்கள், திங்களூர்,
மயிலங்கிணத்துபாளையம் உமா மகேஸ்வரன் சார்பில் வழங்கிய மனுவில்
கூறியதாவது:
பெருந்துறை தாலுகா மடத்துப்பாளையம் பஞ்.,
மடம்புதுார் மக்கள், பட்டியலின மக்களுக்கு இடையே மயான பயன்பாடு
தொடர்பாக அண்மையில் பிரச்னை எழுப்பப்பட்டது. அங்குள்ளவர்கள்
இணக்கமாக வாழ்வதுடன், மயானங்களை குறிப்பிட்ட சமூகத்தினரே
பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாளி சென்னி இறந்த நிலையில்,
மடம்புதுார் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய முற்பட்டபோது,
அவர்களுக்கென உள்ள மயானத்தை பயன்படுத்த கேள்வி எழுப்பினர்.
அவ்விடத்தில் அடக்கம் செய்யவும், அவ்விடம் அனைவருக்கும் பொதுவானது
எனக்கூறி சில குறிப்பாணைகளை காட்டினர். அப்போது சிலர்
செயல்பாட்டால், பதட்டமான நிலை ஏற்பட்டது. மூன்றாம் நபர்களின்
யோசனைப்படி இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
பின் மது போதையில் இருந்த ஒருவர், காலில் விழுந்ததும், அந்த வீடியோவை
பலவாறாக சித்தரித்தனர்.
இதற்கிடையில், வருவாய் துறையினர்,
அம்மயானம் பொதுவானது என்று கூறியதும், மடம்புதுார் மக்கள்,
பட்டியலின மக்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்காமல், உடலை மயானத்தில்
அடக்கம் செய்ய தெரிவித்தனர். ஆனால் பல அமைப்பு, கட்சியினர்
இச்சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிடுகின்றனர். மாவட்ட
நிர்வாகம் உண்மை நிலையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வூரை சேர்ந்த ஆறு பேர் மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்ய
வேண்டும். கலவரத்தை துாண்டும்படி நடப்பவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
