/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு
/
தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு
ADDED : நவ 18, 2025 01:48 AM
ஈரோடு, ஈரோடு, குப்பிப்பாளையம், வாய்க்கால் பகுதி, வளையக்கார வீதியை சேர்ந்த தமிழ்செல்வி உட்பட பலர், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், மனு வழங்கி கூறியதாவது:
எங்கள் தெருவில் வசிக்கும், 250க்கும் மேற்பட்டோர், அதே பகுதியில் உள்ள, 'ஆதவன் தீபாவளி வாரச்சந்தா சீட்டு' நிறுவனத்தில் மாதம், 200, 300, 500, 1,000 ரூபாய் என பணம் செலுத்தினோம்.
200 ரூபாய் சீட்டுக்கு, 10,400 ரூபாய் செலுத்தினால், தீபாவளிக்கு முன், 1,600 ரூபாய் சேர்த்து, 12,000 ரூபாய் தருவதாக கூறினார். முழு பணமும் செலுத்திய நிலையில் தீபாவளிக்கு முன், சீட்டு நடத்தியவர்கள் தலைமறைவாகி விட்டனர். சீட்டு நடத்தியவர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

