/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பகுதியில் கோவில் கட்ட எதிர்ப்பு நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் மனு

ADDED : ஜூன் 20, 2025 01:27 AM
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த பெருமாள்மலை பகுதியில், நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பெருமாள்மலை கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து காங்கேயம் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் வடிவேல்குமரனிடம், மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிவன்மலை ஊராட்சி, பெருமாள்மலை பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடம் ரீ.சா.எண் 787ல் கோவில் கட்ட, நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்ததாக சிலர் கூறிக்கொண்டு, கோவில் கட்ட முயற்சித்து வருகின்றனர். அந்த இடத்துக்கு அருகில் குடியிருப்புகள் உள்ளன. கோவில் கட்டினால் அன்றாட மக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக இருக்கும். சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே மக்களுக்கு இடையூறின்றி, வேறிடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளது.