/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குவின்டாலுக்கு ரூ.3,800 ஆக நெல் விலையை உயர்த்த மனு
/
குவின்டாலுக்கு ரூ.3,800 ஆக நெல் விலையை உயர்த்த மனு
குவின்டாலுக்கு ரூ.3,800 ஆக நெல் விலையை உயர்த்த மனு
குவின்டாலுக்கு ரூ.3,800 ஆக நெல் விலையை உயர்த்த மனு
ADDED : ஜன 26, 2025 07:40 AM
ஈரோடு: தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டம் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. கூட்ட முடிவுகளை, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பினார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயம் மறுமலர்ச்சி பெற நெல் விலையை குவின்டாலுக்கு, 3,800 ரூபாய் என, உயர்த்தி வழங்க வேண்டும்.
தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்ச பால் விலையை லிட்டருக்கு, 100 ரூபாயாக கொள்முதல் செய்ய, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்கி, பொது பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உற்பத்தி செலவு, உழைப்பு கூலி, லாபம் ஆகியவற்றை வைத்து விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் அல்லது விவசாய உற்பத்தி பொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றிட தேவையான வசதிகள், கட்டமைப்பு போன்றவற்றை அரசு செலவில் அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

