ADDED : ஜூன் 22, 2024 02:42 AM
கோபி:கோபி
தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம், நேற்றும் நடந்தது. இதற்கு
தலைமை வகித்த கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், கோபி நகராட்சி
சேர்மன் நாகராஜ், கவுன்சிலர்களான வேலுமணி, மூர்த்தி, செல்வி, இந்திரா
ஆகியோருடன் சென்று மனு கொடுத்தனர்.
மனுவில் சேர்மன் கூறியிருப்பதாவது:
கோபி
நகராட்சியில், 73 ஆண்டுகளில் முதன் முறையாக, தி.மு.க., தலைமையிலான
நகர்மன்றம் பதவியேற்று செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்கு
உட்பட்ட எல்லைக்குள், சாமிநாதபுரம், வண்டிப்பேட்டை,
செங்கோட்டையன் காலனி, நாயக்கன்காடு, பழனை கோவில் வீதி, கரட்டூர்,
ஜவஹர்லால் நேரு வீதி உள்ளிட்ட பகுதியில், அரசு நத்தம் புறம்போக்கில்,
50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, 300
குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு
மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற கலெக்டர், உரிய வழிவகை
செய்வதாக தெரிவித்தார்.