ADDED : செப் 08, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்; காங்கேயம் பொதுமக்கள் பல்லடம் மின்வாரிய அலுவலக மண்டல செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: காங்கேயம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
கடந்த, 5ம் தேதி மட்டும், 12 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆலைகள் மற்றும் தனியார் நிறுவ-னங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சரியான நேரத்துக்கு பொருட்களா தயாரிக்க முடி-யாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மின் வெட்டால் மோட்டார் மற்றும் இயந்திரங்களில் பழுது ஏற்படுகிறது. இதனால் உற்பத்தி குறைந்து வருவாய் பெருமளவில் குறைகிறது. உரிய நட-வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
