/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூமிதான வாரிய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு
/
பூமிதான வாரிய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு
ADDED : ஏப் 30, 2025 01:40 AM
ஈரோடு::
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. நேர்முக உதவியாளர் அமுதா தலைமை வகித்தார். மொடக்குறிச்சி தாலுகா நடுகப்பட்டி, வினோபா நகர் பெருமாள் என்பவர், சட்டை அணியாமல், மண் வெட்டியுடனும் மற்றும் சில அமைப்பினர் முன்னிலையில் வந்து மனு வழங்கி கூறியதாவது:
மொடக்குறிச்சி வடுகப்பட்டி 'ஆ' கிராமத்தில், தமிழக அரசின் பூமிதான வாரியம் மூலம், 1989ல் எனது தந்தை சென்னி மகன் ஆறுமுகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. தந்தையுடன் அதே இடத்தில் வசித்தும், விவசாயமும் செய்து வருகிறோம். நில வரி செலுத்தி சான்றும் பெற்றுள்ளோம்.
தற்போது அந்நிலத்தை எங்கள் நிலத்துக்கு அருகே உள்ள நிலத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி கலெக்டர், ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதேபோன்ற நிலை அப்பகுதியில் பலருக்கு உள்ளது. இவ்வாறு கூறினர்.

