ADDED : ஜூன் 09, 2026 01:45 AM
ஈரோடு; மேட்டூர் மேற்கு கரை கால்வாய் நீரினை பயன்-படுத்துவோர் சங்க நிதி ஆதாரக்குழு தலைவர் தனபால், ஈரோடு கலெக்டர் கந்திசாமியிடம், வழங்கிய மனுவில் கூறியதாவது:
வர்ணபுரம் கிராமம், மேட்டூர் மேற்கு கரை கால்வாய் கடைமடை மையில் எண்: 3/6, 37/ கடைமடை வரை நீர் வளத்துறைக்கு சொந்தமான வாய்க்காலில், குருப்பநாயக்கன்பாளையம் பஞ்., சார்பில் தார்சாலை அமைக்க நீர் வளத்துறை அனுமதி வழங்கியது. இதை ஏற்று, 49.69 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட்டில் கட்டினர். வாய்க்காலின் அடிமட்டம் வாட்டம் வைக்காமல், உயர்த்தி கட்டியதால் சாக்கடை நீர் கலப்பதுடன், வாய்க்கால் நீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. தவிர விளைநிலங்களில் குடியிருப்பு தண்ணீர் புகுந்தும், கரைகளில் வழிந்தோடி சேதம் ஏற்படு-கிறது. இதுபற்றி பல முறை மனு வழங்கி, சீர-மைப்பு செய்து, 11.6 மீட்டர் கால்வாயை, ஒன்றரை அடியாக மாற்றியதால், தண்ணீர் சீராக செல்-லாமல் பாதிப்படைகிறோம். அவற்றை முறை-யாக அகற்றி முழு அளவில் தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும். பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு, சாக்கடை கால்வாய்களை அகற்றி, சீரமைப்பு பணி செய்ய வேண்டும். இவ்-வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
