/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பு வெட்டும் பணியில் மலைப்பகுதி 'அரும்புகள்' கலெக்டரிடம் மனு அளிப்பு

ADDED : ஏப் 27, 2025 04:08 AM
ஈரோடு: சத்தியமங்கலத்தை சேர்ந்த சுடர் அமைப்பு இயக்குனர் நடராஜ், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் உள்ள பள்ளி குழந்தைகள், விடுமுறையால் கரும்பு வெட்டும் பணிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
குறிப்பாக பர்கூர் மலைப்பகுதி கொங்காடை, எஸ்.டி.காலனி, அக்னிபாவி, கடம்பூர், குன்றி, அணில்நத்தம், மாகாளிதொட்டி பகுதி பழங்குடி பள்ளி குழந்தைகள், பெற்றோருடன் கரும்பு வெட்டும் பணிக்கு, சமவெளி பகுதிகளான அந்தியூர், கோபி, சத்தி பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதை ஆய்வுக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.