/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு
/
குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 03, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அம்மாபேட்டை அருகே கல்பாவி பெரியகுரும்பாயத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கி கூறியதாவது:
எங்கள் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். நாங்கள் பல ஆண்டுகளாக ஆழ்துளை கிணற்று நீரை, குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தண்ணீரில் உப்பு தன்மை அதிகம் உள்ளதால், உடல் நிலை பாதிக்கிறது. இந்த தண்ணீர் ஏற்றப்படும் மேல்நிலை தொட்டி, பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை. சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் பாதிக்கின்றனர். எனவே, அருகே உள்ள கிராமங்களுக்கு காவிரி ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுவது போல, எங்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.