/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு
/
எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு
ADDED : நவ 25, 2024 02:23 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் தனபால், பொது செயலாளர் கனகராஜ், ஆட்டோ சங்க செயலாளர் ஷேக் தாவூத் ஆகியோர், ஈரோடு எம்.பி., பிரகா-ஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மோட்டார் வாகன தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்-பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள லோக்சபா
எம்.பி.,கள், மோட்டார் வாகன தொழிலாளர்களின் கோரிக்-கையை லோக்சபாவில் விவாதித்து டீசல் விலை, டோல்கேட் கட்-டணம், இன்சூரன்ஸ் பிரிமீய தொகையை குறைத்தல், விபத்து மரணத்துக்கு டிரைவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைக்கு வழிவ-குக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம்-2019ஐ, வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.