/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி மனு
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி மனு
ADDED : அக் 29, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம், பூங்குன்றனார் வீதி சமூக ஆர்வலர் சுசி ஆறுமுகம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ரேஷன் அரிசியை, கருங்கல்பாளையம், சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் ஒரு கிலோ, ஐந்து ரூபாய் என்ற விலைக்கு சிலர் கொள்முதல் செய்கின்றனர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில அரிசி ஆலைகளுக்கும், வட மாநில தொழிலாளர்களை குறி வைத்தும் விற்கின்றனர்.
இதை தடுக்க வேண்டிய மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, உணவு பாதுகாப்பு துறையினர், சிவில் சப்ளை அதிகாரிகள் அக்கும்பலுக்கு துணையாக உள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தும் நெட்ஒர்க்கை தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

