/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.எப்., மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
/
பி.எப்., மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
ADDED : அக் 16, 2025 01:33 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி சரவணகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலக பொறுப்பு அதிகாரியாக, 'மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2'ஆக சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சேவை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் அம்பத்துார், திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் பணி செய்து, ஈரோடு மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
இங்கு அனைத்து சேவைகளும், சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்தும், சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற சலுகைகளை எந்த தடையும் இன்றி வழங்குவதை உறுதி செய்வதாக, அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நிறுவன உறுப்பினர்கள், உரிமையாளர்கள் ஏதேனும் பி.எப்., குறித்து விளக்கம், குறைகள் இருந்தால் அலவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.