/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆன்லைன் மோசடியில் மக்கள் இழந்த ரூ.2.38 கோடி மீட்பு: எஸ்.பி. தகவல்
/
ஆன்லைன் மோசடியில் மக்கள் இழந்த ரூ.2.38 கோடி மீட்பு: எஸ்.பி. தகவல்
ஆன்லைன் மோசடியில் மக்கள் இழந்த ரூ.2.38 கோடி மீட்பு: எஸ்.பி. தகவல்
ஆன்லைன் மோசடியில் மக்கள் இழந்த ரூ.2.38 கோடி மீட்பு: எஸ்.பி. தகவல்
ADDED : அக் 16, 2025 01:32 AM
ஈரோடு, ''ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்த, ரூ.2.38 கோடியை இந்தாண்டு மீட்டு கொடுத்துள்ளோம்,'' என, ஈரோடு எஸ்.பி., சுஜாதா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், சைபர் க்ரைம் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை, நேற்று எஸ்.பி., சுஜாதா கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து துவங்கி, எஸ்.பி., அலுவலகத்தில் நிறைவு பெற்றது. ஏ.டி.எஸ்.பி., வேலுமணி மற்றும் போலீசார், நந்தா அறிவியல், ஆயுர்வேதம் மற்றும் சித்தா
கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பின், ஈரோடு எஸ்.பி. சுஜாதா, நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது இணைய வழி குற்றம் அதிகளவில் நடக்கிறது. யார் கேட்டாலும் ஓ.டி.பி., எண்ணை தரக்கூடாது. புதிய லிங்க்கை தொடக் கூடாது. பாஸ்வேர்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 117 புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்தாண்டு ஆன்லைன் மோசடியில் இதுவரை பொதுமக்கள் இழந்த, ரூ.2 கோடியே 38 லட்சத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் அளித்துள்ளோம். சைபர் க்ரைம் குற்றம் நடந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். கால தாமதப்படுத்தக் கூடாது. ஆன்லைன் டிரேடிங், ஷேர் மார்க்கெட்டில் அதிக வருவாய் என பல்வேறு சமூக வலைதளங்கள் வழியே, அறிமுகம் இல்லாத நபர்கள் அழைப்பு விடுப்பர். அவற்றை ஏற்க கூடாது. குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்களிடம் அதிகளவில் பணம் இருக்கும். அவற்றை முதலீடு செய்ய வழியின்றி இருப்பர். எனவே அவர்களை குறி வைத்து, சைபர் க்ரைம் குற்றங்களை செய்கின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.