/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
ADDED : அக் 16, 2025 01:32 AM
ஈரோடு, ஈரோட்டில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.
கவிதை போட்டியில், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரி - அர்ஷியா சுல்தானா, ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி - தினேஷ், ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி - செந்தமிழ் சஞ்சய் ஆகியோரும், கட்டுரை போட்டியில், சக்தி பாலிடெக்னிக் கல்லுாரி - சவுந்தர்யா, ஈரோடு ஸ்ரீவாசவி கல்வியியல் கல்லுாரி - ேஹமாமாலினி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி - ரிஷிகா ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர்.
பேச்சு போட்டியில், அரச்சலுார் நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி - நந்தினிதேவி, பெருந்துறை பாரதியார் பல்கலை கழக விரிவாக்க மையம் - அமல்உன்னிகிருஷ்ணன், ஈரோடு சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரி - கார்த்தி ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல், 3 பரிசாக தலா, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.