ADDED : அக் 16, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில், பனை விதைகள் நடவு திட்டத்தின் மூலம், அப்துல் கலாம் பிறந்த நாளான நேற்று, பள்ளி முன்புறம் உள்ள குட்டையின் கரை பகுதியில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார். பள்ளி தேசிய பசுமைப் படை, சாரண மாணவர்கள், ஆசிரியர்கள் ரங்கநாதன், சிவக்குமார், விமலா தேவி உள்பட மாணவர்கள், பள்ளி முன்புறம் உள்ள குட்டையின் கரை பகுதியில், பனை விதைகளை
நடவு செய்தனர்.