/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிக்-அப் வேன் கவிழ்ந்து ௨ பேர் பலி
/
பிக்-அப் வேன் கவிழ்ந்து ௨ பேர் பலி
ADDED : நவ 12, 2024 01:46 AM
பிக்-அப் வேன்
கவிழ்ந்து ௨ பேர் பலி
தாராபுரம், நவ. 12-
தாராபுரம் அருகே சிமெண்ட் ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் கவிழ்ந்ததில், இருவர் பலியாகினர்.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்கள் பாண்டி, 68, ஜெயக்குமார், 41, ஜெகதீஸ், 25, காமேஸ்வரன், 25; தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் இருந்து, பொலிரோ பிக்-அப் வேனில், சிமெண்ட் ஏற்றிக்கொண்டு, கொடுவாய் நோக்கி நேற்று காலை சென்றனர். வேனை காமேஸ்வரன் ஓட்டினார். வேங்கிபாளையம் அருகே எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பாண்டி சம்பவ இடத்தில் பலியானார். உயிருக்கு போராடிய மற்ற மூவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

