/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு நிலம் ஆக்கிரமிப்பு மீட்க வலியுறுத்தி மறியல்
/
அரசு நிலம் ஆக்கிரமிப்பு மீட்க வலியுறுத்தி மறியல்
ADDED : மே 10, 2024 07:03 AM
பெருந்துறை : பெருந்துறை அருகே கந்தாம்பாளையம் புதுாரை சேர்ந்த ஒருவர், தன்னுடைய பட்டா நிலத்துக்கு அருகிலுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார்.
இதனால் கழிவுநீர் சாக்கடையில் செல்லாமல் ஊருக்குள் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இதை வலியுறுத்தி சேலம் - கொச்சி தேசிய நான்கு வழிச்சாலையில், மேம்பாலம் அருகில், பழைய தேசிய நெடுஞ்சாலையில், அப்பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை போலீசார், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ரவிகுமார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே, மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.