/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் கேட்டு மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு சென்னிமலை அருகே மக்கள் கொதிப்பு

ADDED : பிப் 21, 2024 01:05 AM
சென்னிமலை:சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு பஞ்., ஓலப்பாளையம், வெங்கமேடு, கரட்டுப்பாளையம், ஆலமரம் ஆகிய ஊர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அய்யம்பாளையத்தில் இருந்து கிணற்று குடிநீரும் வழங்கப்படுகிறது.
காவிரி குழாய் உடைந்து சரி செய்யாததால், 20 நாளாக குடிநீர் வரவில்லை. அதேசமயம் கிணற்று நீரும் சரியாக போதிய அளவில் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பஞ்., மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், ஆலமரம் என்ற இடத்தில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னிமலை - ஊத்துக்குளி பிரதான சாலையில் போக்குவரத்து பாதித்தது. அப்போது வந்த அரசு பஸ்களையும் மக்கள் சிறைபிடித்தனர்.
சென்னிமலை போலீசார், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ராசு தங்கவேல், பி.டி.ஓ., ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறவே, மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால், ௮:௦௦ மணி முதல், 10 மணி வரை போக்குவரத்து பாதித்தது.