/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரி மறியல்
/
டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரி மறியல்
ADDED : மார் 07, 2024 02:28 AM
தாராபுரம், தாராபுரம் அருகே, டாஸ்மாக் கடையை காலி செய்யக்கோரி நடைபெற்ற சாலை மறியலால், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாராபுரம் அடுத்துள்ள தேர்பாதையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையை மூட வேண்டும் என பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடையை சின்னமோளரபட்டிக்கு மாற்ற ஏற்பாடு நடைபெற்றது. தகவல் அறிந்த சின்னமோளரபட்டி மக்கள், இப்பகுதிக்கு கடையை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் செய்தனர்.
நிலைமை இப்படி இருக்க, தேர் பாதை பகுதி மக்கள் நேற்று மதியம் கடையை காலி செய்ய உத்தரவு வந்தும், தாமதம் ஏன் என கூறி மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கடைகளில் இருந்த மது பாட்டில்கள், டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மறியலால், அப்பகுதியில், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

