/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 07, 2025 01:07 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி மக்கள் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள், தனியார் கடை ஊழியர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர். பேரணி
யின் போது, பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து பழைய கால முறைப்படி மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணி கிருஷ்ணா தியேட்டர் அருகே துவங்கி, ஆர்.கே.வி ரோடு, கொங்காலம்மன் கோவில் வீதி, புதுமஜித் வீதி வழியாக சென்று காவிரி ரோட்டில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி
யில், மாநகராட்சி சுகாதார அலுவலர் பூபாலன் மற்றும் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.